Kelapa Natural

Kelapa Natural

Share

Welcome to Kelapa Natural Looking for moving into natural Cosmetics and Self sustainable living. We help you make them on your own, without any added Chemicals.

Skin care, soaps, hair care, nail care, energy foods/drinks, daily use products etc.

03/08/2026

🟢🟢🟢🟢🟢🟢🟢
*இயற்கை விதை சிகிச்சை*
*நோய்களை குணமாக்கும் சிறிய விதைகள் பெரிய பலன்கள்*
=========≠========
*தினமும் ஒரு இயற்கை மருத்துவ தகவல் அளிக்கிறோம்.வேண்டுவோர் ஆயுசு 120 whatsapp குழுவில் பயணிக்கவும்.*
👇👇👇
https://chat.whatsapp.com/LVoPZ5R3qSiJ9oNsbBXuw1

🟢🟠 *சூரியகாந்தி விதை*
இதில் நிறைவாக உள்ள வைட்டமின் இ திசுக்கள் ஆக்சிஜன் பயன்படுத்துவதால் உருவாகும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் பிரச்னையைத் தவிர்க்கிறது. செலீனியம், டி.என்.ஏ அளவில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை நீக்குகிறது. மக்னீசியம் வலுவான எலும்புக்கு உதவுவதுடன், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க, தசைகளில் ஏற்படும் அதிகப்படியான இறுக்கத்தைப் போக்க உதவுகிறது. சோர்வு, ஒற்றைத் தலைவலி போன்றவற்றையும் போக்குகிறது.

🟢🟠 *எள்*
கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைவாக உள்ளதால், எலும்பு உறுதித்தன்மைக்கும், வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகின்றன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் மாங்கனீசு ஃப்ரீ ராடிக்கல்ஸ் பாதிப்பைத் தவிர்க்கின்றன. துத்தநாகம் எலும்பின் வளர்ச்சிக்கு உதவும், எலும்பு அடர்த்திக் குறைதல் பாதிப்பில் இருந்து காக்கிறது. மன அழுத்தத்தைக் குறைத்து, உய…
மூளை வளம் பெற…
===================
கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயம் என்றாலும், அதனை இயக்கும் மூளைதான் மனித உடலின் தலைமைச் செயலகம். மூளையின் ஆரோக்கியத்தைத் தெரிந்துகொள்ள, ஐந்து கேள்விகள். வேலையை இன்று செய்ய வேண்டாம், நாளை செய்துகொள்ளலாம் எனத் தள்ளிப்போடுகிறீர்களா?
எந்த வேலை செய்தாலும் அதில் தடுமாற்றம் ஏற்படுகிறதா?
ஞாபகமறதி அதிகமாக இருக்கிறதா?
கூர்ந்து கவனிக்கும் திறன் குறைந்துவிட்டதா?
கவனச்சிதறல்கள் ஏற்படுகின்றனவா?
இதில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு இருந்தால்கூட, மூளையைக் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். கவனிப்பு என்றவுடன் மருத்துவரைச் சந்தித்து, ஆலோசனை பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. மூளையை ஆரோக்கியப்படுத்தும் உணவுகளையும் பயிற்சிகளையும் செய்தாலே போதும்.
மூன்று ‘உ’க்கள்
உணவு, உறக்கம், உற்சாகம் எனும் மூன்று ‘உ’க்களைப் பின்பற்றுவது மூளைக்கு அவசியம். மூளையை ஆரோக்கியமாகவைத்திருக்க, தியானம், யோகா, உடற்பயிற்சிகள் தினமும் செய்வது நல்லது. இதனால், மூளை உட்பட அனைத்து உறுப்புகளும் நலம் பெறும்.
அமினோ அமிலங்கள், நைட்ரஜன் ஆக்சைடு, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் போன்ற சத்துக்கள் மூளையின் பலத்துக்கு அவசியம். வல்லாரை, அஸ்வகந்தா, வால்நட்டில் இந்தச் சத்துக்கள் நிறைவாக உள்ளன. மேலும், தர்பூசணி, சாத்துக்குடி, ஃபிளக்ஸ் விதைகள், சோயா, மீன், மாதுளை, பிரவுன் அரிசி, ஆரஞ்சு, பீட்ரூட், அடர்பச்சை நிறக் காய்கறிகள், முழுத் தானியங்கள், கறிவேப்பிலை மூளையின் செயல்திறனை மேம்படுத்த உதவும்.

🟢🟠 *வல்லாரை*
நம்முடைய பாரம்பரிய மருத்துவம், மூளைக்கான சிறப்பு உணவில் வல்லாரையை முதல் இடத்தில் வைத்திருக்கிறது. இதனால், வல்லாரையை சூரணமாகவும், மாத்திரையாகவும் உண்ணும் பழக்கமும் உண்டு. இதில் உள்ள நைட்ரிக் அமிலம், மூளையைச் சிறப்பாகச் செயல்படத் தூண்டும். கவனச்சிதறல்களை ஒழுங்குபடுத்தி, வேலைகளைச் சீராகச் செய்ய உதவும். மூளையில் உள்ள நியூரான்களின் வளர்ச்சிக்கு உதவும். நியூரான்கள் அழியாமல் தடுக்கும். ரத்த நாளங்களை அமைதிப்படுத்தும். தூக்கமின்மை, மன உளைச்சல் போன்ற பிரச்னைகளைச் சரிசெய்யும்.

🟢🟠 *அஸ்வகந்தா*
நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் மூலிகை இது. மூளையைத் தூண்டி, செயல்படவைக்கும். தொற்றுகளிலிருந்து மூளையைக் காப்பதற்கும் உறுதியாக்குவதற்கும் உதவுகிறது. மன அழுத்தத்துக்கு எதிராகச் செயல்பட்டு, மனதையும் உடலையும் ஓய்வு பெறச்செய்யும். தினமும் 10 கிராம் அளவுக்கு, அஸ்வகந்தாவை உணவில் சேர்த்துக்கொண்டால், மூளை தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

🟢🟠 *வால்நட் (அக்ரூட்)*
மூளையின் வடிவத்தைக்கொண்டுள்ள வால்நட், மூளை சிறப்பாகச் செயல்பட உதவும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாட்டுக்கும், சீரான இயக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் உதவுகின்றன. அறிவுத்திறன், சிந்திக்கும்திறன், படைப்பாற்றல் திறனை அதிகரிக்கிறது. வால்நட், மறதி நோயைத் தடுக்கும். தினமும் இரண்டு மூன்று வால்நட் சாப்பிட்டுவந்தால், மூளை செல்கள் பாதுகாக்கப்படும். புதிய செல்கள் உருவாகும்.
மூளையைப் பலப்படுத்தும் மூலிகைப் பால்
வல்லாரைக் கீரை, அஸ்வகந்தா, நாட்டுச் சர்க்கரை – தலா அரை கிலோ எடுத்துப் பொடித்து, டப்பாவில் அடைத்துக்கொள்ளவும். தினமும் ஒரு டம்ளர் சூடான பாலில், இந்தப் பொடி ஒரு ஸ்பூன், இரண்டு வால்நட்களைப் பொடித்துச் சேர்த்துப் பருக வேண்டும்.
பலன்கள்: அனைவரும் பருகலாம். குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது, அவர்களின் நினைவாற்றல,் அறிவுத்திறன் அதிகரிக்கும். வயதாகும்போது வரும் மறதி நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உதவும்.
==================
*Kelapa Narural*
ஆர்கானிக் பொருட்கள் *தமிழகம் முழுவதும்*
*Free Door Delivery செய்து தரப்படும்*
www.kelapanatural.com
*Free Shipping for All over Tamilnadu*
Ph: 9092957654

02/08/2026

🔵🔵🔵🔵🔵🔵🔵
*அணைத்து வித தலைவலிக்கும்..*
*7 விதமான இயற்கை வைத்தியங்கள்*
=================
*தினமும் ஒரு இயற்கை மருத்துவ தகவல் அளிக்கிறோம்.வேண்டுவோர் ஆயுசு 120 whatsapp குழுவில் பயணிக்கவும்.*
👇👇👇
https://chat.whatsapp.com/LVoPZ5R3qSiJ9oNsbBXuw1

தலைவலி/ ஒற்றை தலைவலி/ தலை சுற்றுதல் / தலை நிமிர முடியாமல் இருத்தல் / மைக்ரைன்/ தலைபாரம் - ஆகிய அனைத்துக்கும் இயற்கை வைத்தியம்.
வைத்தியம் - 1.
தேவையான அளவு கற்பூரவல்லி இலையை சுத்தம் செய்து இடித்துச் சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றுடன் நல்லெண்ணெய் கலந்து நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குணமாகும்.
=================
வைத்தியம் - 2.
மகிழம்பூ, சுக்கு, சீரகம், ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளவேண்டும். இந்தப் பொடியை காலை மற்றும் மாலை இரு வேளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் தலைவலி குணமாகும்.
=================
வைத்தியம் - 3.
வேப்பம்பட்டை, கடுக்காய், கோரைக் கிழங்கு, நிலவேம்பு, ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை தண்ணீரில் கலந்து, தண்ணீர் பாதியாக வரும் வரை சுண்ட காய்ச்சி இறக்க வேண்டும். இதனுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு காலை, மதியம், இரவு என்று மூன்று வேளை சாப்பிட்டால் தலைவலி குணமாகும்.
=================
வைத்தியம் - 4.
தேவையான அளவு செண்பக இலையை எடுத்து நன்கு சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஓமத்தை பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பொடி செய்த ஓமத்தை இலையின் மேல் நன்கு தூவ வேண்டும். இதை ஒரு துணியில் வைத்து தலையில் கட்டி வந்தால் தலைவலி குணமாகும்.
=================
வைத்தியம் - 5.
சிவப்பு காய்ந்த மிளகாய் 200 கிராம், மிளகு 200 கிராம் ஆகியவற்றை எடுத்து இடித்து பொடி செய்து கொள்ள வேண்டும். அந்த பொடியினை இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு தண்ணீர் அரை லிட்டர் வரும் வரை சுண்ட காய்ச்சி வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் பசும்பால் 1/2 லிட்டர் மற்றும் நல்லெண்ணெய் 1/2 லிட்டர் கலந்து பதமாய் காய்ச்சி ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். இதை வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் எப்படிப்பட்ட தலைவலியும் குணமாகும்.
=================
வைத்தியம் - 6.
தேவையான அளவு வெற்றிலை எடுத்து நன்றாக இடித்து சாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வெற்றிலைச் சாற்றில் கிராம்பை வைத்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த களிம்பை நெற்றியில் பொட்டு பகுதியிலும் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குணமாகும்.
=================
வைத்தியம் - 7.
கீழாநெல்லி சாறு, உத்தாமணி சாறு, குப்பைமேனி சாறு சம அளவு கலந்து ஒரு வெள்ளை நிற சுத்தமான பருத்தி துணியில் நனைத்து. நல்லெண்ணெயில் எரித்து நசியமிட ஓயாத தலைவலி பாரம் குணமாகும்

நன்றி 💐🙏

01/08/2026
01/08/2026

🟢🟢🟡🟡🟢🟢🟡🟡
*Bach மலர் மருத்துவம் !*
*Bach Flower Remedy.*
*5 Days WhatsApp online class*
==============
உடலில் வரும் 90% சதவீதம் நோய்களுக்கு முக்கிய காரணம் நமது மனம் தான் என்பது முன்னோர்களின் கருத்து, மனதால் வரும் அணைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு இந்த 38 மலர்களில் உள்ளது என்பதை Dr. Edward Bach. தனது ஆராய்ச்சியின் மூலம் நிரூபித்துள்ளார் இதை படிப்படியாக நீங்கள் கற்று கொள்ளலாம் !

*மலர் மருத்துவத்தை முறையாக கற்றுக்கொண்டு நீங்களும் மலர் மருத்துவர் ஆகலாம் !*

*நடத்துபவர் : R SUBBURAJ, M.D.(ACU), PHD(ACU) & Flower therapist*
===================
*நாள் : ஆகஸ்ட் 5 முதல் 9 வரை.*
புதன், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு.
தொடர்புக்கு: +91 9092957654
fee : 1999/- Per head

*நமது மனதால் வரும் பிரச்சனைகள்.*
======================
🟡 மன சோர்வு
🟡 தீராத துக்கம்
🟡 மன குழப்பம் !
🟡 நாள்பட்ட வேதனை
🟡 தீராத கவலைகள்
🟡 எதெற்கெடுத்தாலும் பயம்.
🟡 அதிகப்படியான கோபம் !
🟡 படிப்பில் கவனம் செலுத்த முடியாமை.
🟡 கணவன் மனைவி தீராத மன கசப்புக்கள்.
🟡 குழப்பத்தால் முக்கிய முடிவுகள் எடுக்க முடியாமை.
🟡 காரணம் தெரியாமல் போதைக்கு அடிமையாகுதல்.
🟡 பொய் சொல்லும் குழந்தைகளை எப்படி பராமரிப்பது
🟡 சின்ன சின்ன விசயத்திற்கு பதட்டம் ஆகுதல்.
🟡 சந்தேகத்தால் மன உளைச்சல் ஆவது ஏன் ?
🟡 தேவையற்ற யோசனைகளால் தூக்கத்தை இழப்பது !

இத்தனை பிரச்சனைகளுக்கும் மலர் மருத்துவத்தில் தீர்வு உண்டு. இதை முறையாக புரிந்து கொண்டு எப்படி மலர் மருத்துவத்தை பயன்படுத்துவது என்பதை 5 நாள் WhatsApp online வகுப்பில் கற்றுக்கொள்ள போகிறீர்கள்.

✅ மலர் மருத்துவம் என்றால் என்ன?

✅ மற்றவர்களின் மனதில் உள்ள பிரச்சனையை அறிவது எப்படி ?

✅ அவர்களுக்கே தெரியாத குறைகளை கண்டறிவது எப்படி ?

✅ மலர் மருத்துவம் உடனே பலன் தருமா ? எத்தனை நாட்களில் ?

✅ இதில் பின்விளைவுகள் உள்ளதா ?

✅ மனதின் எந்த பிரச்சனைக்கு, எந்த மலர்களை தேர்தெடுப்பது ?

✅ மலர் மருந்தை, எப்படி தயாரித்து பயன்படுத்துவது ? அளவு முறைகள்!

✅ மருத்துவப் பின்னணி இல்லாதவர்களும் கற்றுக்கொள்ளலாம்.

✅ 5 நாட்களில் அடிப்படை முதல் நடைமுறை வரை.

*Booking and contact: +91 9092957654*
💐💐🙏🙏💐💐

01/08/2026

🟡🟡🟡🟡🟡🟡🟡
*சாப்பிட்ட பிறகு*
*இதை நிச்சயம் செய்யாதீர்கள் !*
*அவசியம் அறிவோம் பல நோய்களை தவிர்ப்போம்.*
=========≠========
*தினமும் ஒரு இயற்கை மருத்துவ தகவல் அளிக்கிறோம்.வேண்டுவோர் ஆயுசு 120 whatsapp குழுவில் பயணிக்கவும்.*
👇👇👇
https://chat.whatsapp.com/LVoPZ5R3qSiJ9oNsbBXuw1
🟡🟠 1. சாப்பிட்டவுடன் தண்ணிரை வயிறுமுட்ட குடிக்க கூடாது. இதனால் ஜிரணநீர் நீர்ந்து போய் அஜிரணமாகும் பல நோய்கள்வர இது முக்கிய காரணமாக அமையும்.

🟡🟠 2. சுமார் 40 நிமிடம் கழித்து தண்ணீர்தாகம் எடுக்கும் அப்போது குடிக்கவேண்டும்.

🟡🟠 3. சாப்பிட்டதும் படுத்து விடக்கூடாது. காரணம், குடல் தனது செயல்பட மிகவும் சிரமப்படும். ஜீரணம் முறையாக நடக்காது.

🟡🟠 4. குறைந்தது ஒரு மணிநேரம் கழித்தே உறங்க வேண்டும். இது மதியம் ஓய்வு எடுப்பவர்களுக்கும் பொருந்தும்.

🟡🟠 5. சாப்பிட்டதும் குளிக்க கூடாது குறைந்தது 2 மணிநேரம் கழித்தே குளிக்க வேண்டும்.

🟡🟠 6. சாப்பிட்டு முடித்ததும் எந்த பழங்களையும் சாப்பிடக்கூடாது. காரணம், உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணிநேரங்களாகும்.
பழங்களின் நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான்.
இந்த வித்தியாசத்தால் நாம் சாபிட்ட பழம் வாயுவாக மாற்றம் பெரும். இதில் ஒரு பழத்துக்கு மட்டும் விதிவிலக்கு அது பேரீச்சம்பழம்.

🟠🟡 7. சாபிட்ட உணவு ஜீரணமாகாத நிலையில் வேறு உணவுகள் எதையும் உண்ணக்கூடாது. காரணம், இவ்வாறு சாப்பிட்டால் ஏற்கனவே சாபிட்ட உணவு ஜீரணத்தை கடுமையாக பாதிக்கும்

🟡🟠 8. குளிர்பானங்கள், ஐஸ்கீரீம், ஐஸ்வாட்டர் இவைகளையும் குடிக்க கூடாது. காரணம், உணவு ஜீரணமாக நமது குடலில் வெப்பம் இருக்கவேண்டும். அந்த வெப்பத்தை இந்த குளிர்பானங்கள் இல்லாமல் செய்துவிடும்.

🟠🟡 9. சாப்பிட்டதும் பரபரப்பாக இயங்குவதோ நடப்பதோ பளுவானவற்றை தூக்துவதோ கூடாது. காரணம், அவ்வாறு செய்தால் உணவு கீழ்நோக்கி செல்லாமல் மேல் நோக்கி வரும். இதனால் நெஞ்சு எரிச்சல், வாயு தொல்லைகள் ஏற்படும்.
==================
*Kelapa Narural*
ஆர்கானிக் பொருட்கள் *தமிழகம் முழுவதும்*
*Free Door Delivery செய்து தரப்படும்*
www.kelapanatural.com
*Free Shipping for All over Tamilnadu*
Ph: 9092957654

30/07/2026

🟢🟣 🟢🟣 🟢🟣
Smart phone and computer தொடர்ந்து பார்ப்பதால் வரும்,
கண் சார்த்த பிரச்சனைகளுக்கு இயற்கை வைத்தியம்

*கண்வலி, கண் அரிப்பு, கண் சிவத்தல், கண் எரிச்சல், கண் நோய்கள், கண்ணில் கட்டி, மங்கலான பார்வை, கண் பார்வை அதிகரிக்க, மற்றும் கண் கோளாறுகள் தீர - இயற்கை வைத்தியம்*
=================
*தினமும் ஒரு இயற்கை மருத்துவ தகவல் அளிக்கிறோம்.வேண்டுவோர் ஆயுசு 120 whatsapp குழுவில் பயணிக்கவும்.*
👇👇👇
https://chat.whatsapp.com/DzoOwlLmEeQ9sjWDv0Fbzj?s=cl&p=a&ilr=2&amv=2

🟢🟣 தீர்வு -1.
வில்வம் மரத்தின் இளம் தளிர் இலைகளை எடுத்து அதை இளஞ்சூட்டில் நன்றாக வதக்கி பின்னர் தூசி இல்லாத வெள்ளை துணியில் வைத்து சிறிய மூட்டை போல் கட்டி கண்களை சுற்றி ஒத்தடம் கொடுத்தால் குணமாகும்.

🟢🟣 தீர்வு-2.
அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு நான்கையும் வறுத்து பொடி செய்து தேனில் கலந்து தினமும் இருவேளை கொஞ்சமாக சாப்பிட்டால் குணமாகும்.

🟢🟣 தீர்வு-3.
கருவேலம் கொழுந்து இலையை தேவையான அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் சீரகத்தை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கண்களை நன்றாக மூடிக்கொண்டு கண்களுக்கு மேல் அரைத்து வைத்துள்ள சாந்தினை வைத்து அதற்கு மேல் நான்கு வெற்றிலையை வைத்து ஒரு துணியால் கட்ட வேண்டும். 15 நிமிடம் முதல் அரைமணி நேரம் வரை இப்படி வைத்திருக்கலாம்.
தினமும் ஒரு முறை மொத்தம் மூன்று நாள் செய்தால் போதும் குணமாகும்.

🟢🟣 தீர்வு - 4.
அருகம்புல், சீரகம், மிளகு, ஆகியவற்றை தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து இடித்து எடுத்துக்கொள்ளவேண்டும். பின்னர் அந்த கலவையை ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு சுமார் 15 நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். இதை தலைக்கு தேய்த்து வந்தால் கண் வலி குறைந்து ஆரோக்கியம் கிட்டும்.

🟢🟣 தீர்வு - 5
10 மில்லி தண்ணீரில் 10 கிராம் மரமஞ்சள், 3 கிராம் மஞ்சள் மற்றும் 3 கிராம் படிகாரம் ஆகியவற்றை கலந்து ஒரு கண்ணாடி பாத்திரத்தில் இரவு முழுவதும் ஊற வைத்து விடவேண்டும். காலையில் அதை எடுத்து ஒரு துணியில் வடிகட்டி அந்த நீரைக் கொண்டு 7 நாட்கள் முகம் மற்றும் கண்களை கழுவி வந்தால் கண்ணில் ஏற்படும் அனைத்து வியாதிகளும் குணமாகும்.

🟢🟣 தீர்வு - 6
கடுக்காய் பொடி, நெல் பொடி, தான்றிக்காய் பொடி சம அளவு சேர்த்து தினசரி 2 கிராம் அளவிற்கு எடுத்து அதை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
குறிப்பு : இதில் கூறப்பட்ட அனைத்து பொருள்களும் அருகிலுள்ள நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
=================
*Kelapa Narural*
ஆர்கானிக் பொருட்கள் *தமிழகம் முழுவதும்*
*Free Door Delivery செய்து தரப்படும்*
www.kelapanatural.com
*Free Shipping for All over Tamilnadu*
Ph: 9092957654

29/07/2026

🔵🔵🔵🔵🔵🔵🔵
நோய் என்றால் என்ன?

மனிதனுக்கு நோய் ஏன் வருகிறது?

நமது ஆயுட்காலம் குறைவதற்கு இதுதான் காரணமா?
================
தினமும் ஒரு இயற்கை மருத்துவ தகவல் அளிக்கிறோம்.வேண்டுவோர் ஆயுசு 120 whatsapp குழுவில் பயணிக்கவும்.
👇👇👇
https://chat.whatsapp.com/DzoOwlLmEeQ9sjWDv0Fbzj?s=cl&p=a&ilr=2&amv=2

🔵 இந்த உடலானது நாம் உண்ணும் உணவினாலும், குடிக்கும் தண்ணீராலும், சுவாசிக்கும் காற்றினாலும், சூரிய வெளிச்சத்தாலும்,

சூழ்நிலையின் தட்பவெப்பங்களாலும் வாழ்வு உடையதாய் இருக்கிறது.
எனவே, நாம் உண்ணும் உணவு நல்ல உணவாக இருக்க வேண்டும்; குடிக்கும் தண்ணீர் நல்ல நீராக இருக்க வேண்டும்;
சுவாசிக்கும் காற்று நல்ல காற்றாக இருக்க வேண்டும்.

🔵 அப்போதுதான் இந்த உலகில் நாம் உடல் நலத்தோடு வாழமுடியும்.
ஆனால் நாம் எவ்வளவுதான் எச்சரிக்கையோடு நடந்துகொண்டாலும், சில சமயங்களில் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ,
தவறான உணவுகளை உட்கொண்டு விடுகிறோம்.

🔵 அழுக்கான நீரைக் குடித்து விடுகிறோம்.
அசுத்தமான காற்றைச் சுவாசித்து விடுகிறோம்.
அப்பொழுது,
நாம் உண்ட உணவு, குடித்த நீர், சுவாசித்த காற்று இவற்றில் உள்ள நச்சுப் பொருள்கள் அனைத்தும் நம் உடம்பினுள்ளே போய்ப் படிந்து விடுகின்றன.
அவ்வாறு படிந்துவிட்ட நச்சுப் பொருள்களைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. அவற்றை வெளியேற்றுவதற்கு நாம் ஒன்றும் முயற்சி செய்வதும் இல்லை. எனினும், நம் உடம்பானது, தானாகவே அந்த முயற்சியைச் செய்கிறது.

🔵 உடம்பு செய்யும் அந்த நன்முயற்சிக்குத்தான் நோய் என்று பெயர்
நாம் தவறான உணவுகளை உண்ணாமலும் அழுக்கான நீரைக் குடிக்காமலும், அசுத்தமான காற்றைச் சுவாசிக்காமலும், மிக மிக விழிப்போடு நடந்து கொள்வதாக வைத்துக் கொள்வோம்.
அப்போதுகூட, நமக்கு நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எப்படியென்றால்,
நாம் எவ்வளவு நல்ல உணவை உண்டாலும், நாம் உண்ணும் உணவு முழுவதையும் உடம்பு அப்படியே ஏற்றுக்கொண்டு விடுவது இல்லை.

🔵 நாம் எவ்வளவு நல்ல தண்ணீரைக் குடித்தாலும் நாம் குடிக்கும் தண்ணீர் முழுவதையும் உடம்பு அப்படியே ஏற்றுக்கொண்டு விடுவது இல்லை.
நாம் எவ்வளவுதான் நல்ல காற்றைச் சுவாசித்தாலும், நாம் சுவாசிக்கும் காற்று முழுவதையும் உடம்பு அப்படியே ஏற்றுக்கொண்டு விடுவது இல்லை.

🔵 நாம் உண்ணும் உணவிலே, தனக்குத் தேவையானதை மட்டும் உள்ளிழுத்துக் கொண்டு, மீதியைக் கழிபொருளாக ஒதுக்கித் தள்ளி விடுகிறது நம் உடம்பு.

🔵 நாம் குடிக்கும் நீரிலே, தனக்குத் தேவையானதை மட்டும் உள்ளிழுத்துக் கொண்டு, மீதியைக் கழிபொருளாக ஒதுக்கித் தள்ளி விடுகிறது நம் உடம்பு.
நாம் சுவாசிக்கும் காற்றிலே தனக்குத் தேவையானதை மட்டும் உள்ளிழுத்துக் கொண்டு மீதியைக் கழிபொருளாக ஒதுக்கித் தள்ளி விடுகிறது

🔵 நம் உடம்பு.இந்தக் கழிபொருள்கள் தாம் நாம் வெளிவிடுகிற மூச்சுக் காற்றாகவும், வியர்வையாகவும், சிறுநீராகவும். மலமாகவும், நமது உடம்பினின்று வெளித் தள்ளப் படுகின்றன.

🔵 எனவே, நம் உடம்பினுள்ளே இரண்டு வகையான இயக்கங்கள் இடையறாது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒன்று, உள்ளிழுக்கும் இயக்கம்.
மற்றொன்று, வெளித்தள்ளும் இயக்கம்.
உள்ளிழுக்கும் இயக்கத்தை ஆங்கிலத்தில் (Assimilation) என்று சொல்லுவார்கள். வெளித்தள்ளும் இயக்கத்தை எலிமினேஷன் (Elimination) என்று சொல்லுவார்கள்.
இவ்விரண்டு இயக்கங்களும் சீராக நடைபெற்று வருமானால், நமக்கு நோயே வரமாட்டாது.

🔵 நோயே மட்டுமன்று, நமக்கு மரணமேகூட வரமாட்டா.
இந்த இயக்கங்களில் சீர்கேடு ஏற்படும்போதுதான், நமக்கு நோய் தோன்றுகிறது. மரணமும் நேருகிறது! இவ்வியக்கங்களை நடத்தும் சக்திக்கே பிராணசக்தி (Life Force) என்று பெயர்.

=================
ஆயுசு 120 குழுமம்
Kelapa Narural
ஆர்கானிக் பொருட்கள் தமிழகம் முழுவதும்
Free Door Delivery செய்து தரப்படும்
www.kelapanatural.com
Free Shipping for All over Tamilnadu
Ph: 090929 57654

#தமிழ்ஆரோக்கியம் #ஆரோக்கியக்குறிப்புகள் #இயற்கைமருத்துவம் #சித்தமருத்துவம் #மருத்துவகுறிப்புகள் #நலவாழ்வு #ஆரோக்கியவாழ்க்கை #தமிழ் #தமிழ்நாடு #உடல்நலம் #இயற்கைவாழ்க்கை

28/07/2026

🟢🟢🟢🟢🟢🟢🟢
ஆரோக்கியத்தையும், அழகையும், பாதிக்கும் கெட்ட கொழுப்புகளை குறைக்கும் 13 குறிப்புகள் !
================
தினமும் ஒரு இயற்கை மருத்துவ தகவல் அளிக்கிறோம்.வேண்டுவோர் ஆயுசு 120 whatsapp குழுவில் பயணிக்கவும்.
👇👇👇
https://chat.whatsapp.com/DzoOwlLmEeQ9sjWDv0Fbzj?s=cl&p=a&ilr=2&amv=2

🟢 1. கொழுப்பை குறைப்பதில் பூண்டுக்கு இணை பூண்டேதான். கொழுப்பில் கொழுப்பு கரையும் என்பது போல பூண்டில் உள்ள கொழுப்பில் நமது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு கரைக்கப்பட்டு நல்ல கொழுப்பு அதிகமாகும்.
🟢 2. இஞ்சி உடம்பின் கெட்ட கொழுப்பை கரைக்க பயன்படுகிறது. உணவில் அதிகமாக இஞ்சியை சேர்க்க வேண்டும்.
🟢 3. வெங்காயம், குறிப்பாக சின்ன வெங்காயம்.
🟢 4.லவங்க மசாலா பட்டை நமது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதுடன் மொத்த கொழுப்பின் அளவையும் குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவையும் குறைக்கிறது.
🟢 5.சிவப்பு அரிசி, கொழுப்பை குறைக்கிறது.
🟢 6. நிலக் கடலை நன்மை செய்யும் கொழுப்பை அதிகரித்து தீமை செய்யும் கொழுப்பை குறைக்கிறது. உணவில் முக்கியமாக கடலை எண்ணையை பயன்படுத்த வேண்டும்.
🟢 7. கவளை மீன் எனப்படும் சாலை மீன் நமது உடம்பின் கொழுப்பை குறைப்பதுடன், நமக்கு தேவையான ஒமேகா 3 யை அதிகளவில் கிடைக்கச் செய்கிறது.
🟢 8. கருப்பு திராட்சை கொழுப்புச் சத்தை குறைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.
🟢 9. கொள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு என்பது நமது பழமொழி. கொள்ளு நமது உடம்பின் மிகை கொழுப்பை சமன்படுத்துகிறது.
🟢 10. சோயா, கோதுமை போன்ற தாணியங்களும் கொழுப்பை குறைக்கப் பயன்படுகிறது. சோயாபால் தினமும் அருந்தவும். இல்லை எனில் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சோயாமாவை, உங்களுக்குத் தயாரிக்கப்படும் உணவில் சேர்த்து பலகாரம் செய்யச் சொல்லுங்கள். சோயா தயிரும் பயன்படுத்தலாம்.
🟢 11. கொலாஸ்டிராலைக் குறைத்து HDL என்ற நல்ல கொலாஸ்டிரால் எப்போதும் அளவு குறையாமல் பார்த்துக்கொள்வதில் மீனின் பங்கு மகத்தானது. ஒமேகா-3 என்ற அமிலம் மீனில் கிடைக்கிறது. எனவே ஒருநாள் விட்டு ஒரு நாள் 100 கிராம் மீனையும் உணவில் சேருங்கள். சைவ உணவுக்காரர்கள் மீன் எண்ணெய் கேப்சூல் இரண்டு சாப்பிடலாம்.
🟢 12. உணவு உண்டபின் சுடுநீர் அருந்தவும்.
🟢 13. வாரம் 3 முறை எலுமிச்சை சாறு சுடுநீர் கலந்து அருந்தவும். காலை 11 மணிக்கு பிறகு
உடல் பருமனாவதைத் தடுக்கும் முயற்சியில் கவனத்தைச் செலுத்தினால் எல்லா நோய்களும் குணமாக ஆரம்பித்துவிடும்
=================
Kelapa Natural
ஆர்கானிக் பொருட்கள் தமிழகம் முழுவதும்
Free Door Delivery செய்து தரப்படும்
www.kelapanatural.com
Free Shipping for All over Tamilnadu
Ph: 090929 57654






















#தினமும்ஆரோக்கியம்
#ஆரோக்கியக்குறிப்புகள்
#ஆரோக்கியவாழ்க்கை
#இயற்கைமருத்துவம்
#இயற்கைவாழ்க்கை
#மூலிகைமருத்துவம்
#நலவாழ்வு
#ஆரோக்கியதமிழ்
#தமிழ்ஆரோக்கியம்
#யோகா
#உடல்நலம்
#மருத்துவக்குறிப்புகள்
#உணவேமருந்து
#நோயற்றவாழ்வு
#தமிழ்நாடு
#ஸ்வரூபயோகாலயா

27/07/2026

🟣🟣🟣🟣🟣🟣🟣
நமது பாரம்பரியமிக்க ஆரோக்கியம் காக்கும்... சின்னசின்ன வைத்திய முறைகள்
================
https://chat.whatsapp.com/DzoOwlLmEeQ9sjWDv0Fbzj?s=cl&p=a&ilr=2&amv=2

🟡 1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
≠================
🟡 2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
≠================
🟡 3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
≠================
🟡 4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
≠================
🟡 5. அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
≠================
🟡 6. வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
≠================
🟡 7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
≠================
🟡 8. சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
≠================
🟡 9. மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
≠================
🟡 10. கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
≠================
🟡 11. வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
≠================
🟡 12. பற் கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
≠================
🟡 13. வாய்ப் புண்
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
≠================
🟡 14. தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
≠================
🟡 15. வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

🟡 16. அஜீரணம்
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

🟡 17. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

🟡 18. வியர்வை நாற்றம்
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

🟡 19. உடம்புவலி
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

🟡 20. ஆறாத புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

🟡 21. கண் நோய்கள்
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்

🟡 22. மலச்சிக்கல்
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது.
தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்
🟡 23. கபம்
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

🟡 24. நினைவாற்றல்
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

🟡 25. சீதபேதி
சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

🟡 26. ஏப்பம்
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

🟡 27. பூச்சிக்கடிவலி
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

🟡 28. உடல் மெலிய
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

🟡 29. வயிற்றுப்புண்
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

🟡 30. வயிற்றுப் போக்கு
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

🟡 31. வேனல் கட்டி
வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

🟡 32. வேர்க்குரு
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

🟡 33. உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

🟡 34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

🟡 35. தாய்ப்பால் சுரக்க
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

🟡 36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

🟡 37. எரிச்சல் கொப்பளம்
நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

🟡 38. பித்த நோய்கள்
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

🟡 39. கபக்கட்டு
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

🟡 40. நெற்றிப்புண்
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

🟡 41. மூக்கடைப்பு
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

🟡 42. ஞாபக சக்தி
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

🟡 43. மாரடைப்பு
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்

🟡 44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

🟡 45. கை சுளுக்கு
கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

🟡 46. நீரிழிவு
அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

🟡 47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

🟡 48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

🟡 49. உடல் வலுவலுப்பு
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

🟡 50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது..
==================
Kelapa Narural
ஆர்கானிக் பொருட்கள் தமிழகம் முழுவதும்
Free Door Delivery செய்து தரப்படும்

👇👇👇www.kelapanatural.com

Free Shipping for All over Tamilnadu
Ph: 9092957654
💐🙏💐🙏

Want your business to be the top-listed Beauty Salon in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

Chennai

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm